பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் 79

ருக்கு நான் விளங்கினேன். எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. இப்ப்டியெல்லாம் நினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதல்ைதான் எனக்கு அப்படித் தோன்றிற்ருே என்னவோ?

இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா-அப்பா. பிறகு நாங்கள்-நீங்கள், பிறகு உங்கள் அண்ணன். மன்னிமார்களின் குழந்தைகள். ஆனுல் இங்கே எல்லா உயிர்களின் ஒருமையின் வழிபாடு இருக்கின்றது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆணுல் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலேக் கோட்டைமேல் உச்சிப் பிள்ளையார் எழுந் தருளியிருக்கிறது போல் பாட்டி மூன்ரும் மாடியில் எழுந்தருளி யிருக் கிருர், அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரிய வில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தை களுக்கு மூன்ரும் மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு ஒருவரும் அண்டக்கூடாத பிராகாரம். ஆறுகால பூஜை போல், அம்மா பாரி சரீரத்தைத் துக்கிக்கொண்டு, குறைந்தது நாளேக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிருச். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிருர், அது கஞ்சியா, கூழா, புனர்ப்பாகமா சாதமா-எதுவுமே எங்களுக்குச் சரியாய்த் தெரியாது. அதை ஒரு தட்டிலோ சொம்பிலோ, நிவதேனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக்கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென்று பற்றிய மஞ்சளுடனும், நெற்றியில் பதக்கம் போன்ற குங்குமத்துடனும், ஈரங்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடி யேறுகையில் எனக்கு உடல் புல்லரிக் கிறது.

சில சமயங்களில் அம்மா அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்ருய்க் கீழிறங்கி வருகிருர்கள், ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவதுபோல். ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில் 'சடக் கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணி விட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்பு கின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது.

"என்னடி குட்டி, இப்போ என்ன விசேஷம்??

எனக்கே தெரிந்தால் தானே? உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண் னிர் தாரை தாரையாய் வழிகிறது. அம்மா முகத்தில புன்னகை தவழ்கின்றது. அன்புடன் என் கன்னத்தைத் தடவி விட்டு இரு வரும் மேலே நடந்து செல்கிருர்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக்கொள்கிருர்: "பரவாயில்லே. பெண் &ணப் பெரியவாள் சின்னவாள் மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.'