பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் &星

ஆகிவிட்டன. அவருக்கு வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்துவிட்ட பின், கண்கள்தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல், குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது: இவர் இவரா? இதுவா? கோவிலில் நாம் வணங்கிடும் சின்னத் 'திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்யாசம்? கோவிலில்தான்

என்ன் இருக்கிறது?- -

-ஐயோ ஐயோ-' என ர்ேழி அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப்போய் எதிர்ோல மிட்டபடி எல்லாரும் குலுங்கக் குலுங்க ஓடுகிருேம். வீல்" என அழுதபடி குழந்தை அவன் பாட்டிமேல் வந்து விழுகிறன். 'என் னட்ா கண்ணே!” அம்மா அப்படியே வாரி அண்ேத்துக் கொண் டார். சேகர் எப்பவும் அவர் செல்லப் பேரன். இரண்டாமவரின் குழந்தை யில்லேயா?

"பாட்டி பாட்டி: பையன் ரோலத்தில் இன்னமும் விக்கி விக்கி அழுகிருன். 'அம்மா அடி அடின்னு அடிச்சூட்டா-'

'அடிப் பாவி நாளும் கிழமையுமாய் என்ன பண்ணிட்டாடா உன்னே! அம்மாவுக்கு உண்மையிலே வயிறு எரிந்து போய் விட்டது

காந்தி! ஏண்டி காந்தி!!--

ரேழி யறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்கார்ந்திருந்தாள், ஒரு காலத் தொங்கவிட்டு ஒரு காலேக் குந்திட்டு, அந்த முட்டிமேல் கைகளைக் கோத்துக்கொண்டு. கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள் வதுகூட அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக் கனல் வீசிற்று. உள்வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங் கிற்று. அம்மாவைக் கண்டதும் அவள் எழுந்திருக்கக் கூட

- :ஐயையோ!-என் பக்கத்தில் சின்ன மன்னி நின்றுகொண் டிருந்தாள். முழங்கையை யிடித்துக் காதண்டை, 'காந்தி மன் னிக்கு வெறி வந்திருக்கு' என்ருள். -

காந்தி மன்னிக்கு இப்படி நினத்துக்கொண்டு, இம்மாதிரி முன் னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாட் களுக்குக் கதவையடைத்துக் கொண்டுவிடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனே ராகு பிடிப்பதுபோல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்விவிடும். அப்பொழுது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள்.

ur–G - -