பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற் கடல் 83

"பாட்டி! பாட்டி! நான் ஒண்னுமே பண்ணல்லே. ஊசி மத் தாப்பைப் பிடிச்சுண்டு வந்து இதோ பாரு அம்மா'ன்னு இவள் முகத்தெதிரே நீட்டினேன். அவ்வளவு தான் என்னேக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனியவைச்சு முதுகிலேயும் மூஞ்சியிலேயும் கோத் இக் கோத்து அறைஞ்சுட்டா, பர்ட்டீ.-ப்ைபனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவன் அனைத்துக் கொண்டார். چه .

"இங்கே வா தோசி, உன்னத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கிறபோதே அங்பனுக்கு உலை வெச்சர்ச்சு. உன்னே என்ன பண்ணுல் தகாது! அம்மாவுக்குக் கன கோபம் வந்து விட்டது. -

"நீயும் நானும் பண்ணின பாவத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனேயாவது ஆண்டவன் நமக்குப் பிச்சை யிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன். இன்னிக்குத்தான் நாள் பார்த்துண்டையா, உன் துக்கத்தை நீ கொண்டாடிக்க? நானும்தான் பிள்ளையைத் தோத்துட்டு நிக்க எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளைய sug్చు? ** --

மன்னி சீறிஞள். உங்களுக்குப் பிள்ளே பேர்னதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணுயிடாது!’

நாங்கள் அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிட்டோம். அம்மாவை நேரிடையாகப் பார்த்து இப்படிப் பேசறவாளும் இருக்காளா? இன் ஒளிக்கு விடிஞ்ச வேளே என்ன வேளை? .

- அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி

விட்டு நேரே மாட்டுப் பெண்னே வாரியசீனத்துக் கொண்டார் .

- மன்னி பொட்டென உடைந்து போளுள். அம்மாவின் அகன்ற

இடுப்பைக் கட்டிக்கொண்டு குழந்தைக்கு மேல் விக்கி விக்கி அழு தாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலே முடிந்து நெற்றியில் கலந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.

காந்தி, இதோ பார், இதோ பாரம்மா-’’

சேகர் ஒரு ஊசி மத்தாப்பை அம்மாவுக்கும் பாட்டிக்கும். முகத் துக்கு நேர் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் கன்னத் தில் கண்ணிச் இன்னும் காயவில்லை.

எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோருக்கும் கண்கள். நனந்திருந்தன. . . . . -- - -