பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱。 - பாற் கடல்

பின்னல் வருவது போலப் போக்குக் காட்டிச் சமாளித்தார்கள். உத்தியோக உயர்வை விரும்பிய வீரர்கள் சிலர் மட்டும், உயிரைத் திருணமாக மதித்து, சங்கரனைப் பின் தொடர்ந்தார்கள்.

‘'இப்போது நான் செய்யப் போகும் மேற்பார்வை வேலையை நேற்றே ஈசுவரன் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும். மிஸ்டர் டிக்ரூஸ் ஒரு ஆளே அனுப்பி ஈசுவரன் 'குவாட்டர்ஸுக்குத் திரும்பி வந்து விட்டாரா என்று பார்த்து வரச் சொல்லுங்கள், வந்திருந்தால் உடனே புறப்பட்டு இங்கே வரும்படி சொல்லி அனுப்புங்கள்’’ என்ருர் சங்கரன், பாதி தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது.

டிக்ருஸ் கேசவனிடம் சொல்ல. கேசவன் மாதவனிடமும், மாதவன் மதுசூதனனிடமும் சொல்லி ஒலி பரப்பி, கடைசியில் கூலி யாள் குப்புசாமி "குவாட்டர்ஸ்"க்கு ஒடிஞன் ஈசுவரனக் கூட்டிவர.

உத்தரவு பிறப்பித்து விட்ட பெருமையுடன் அலட்சியமாகத் திரும்பிளுர் சங்கரன்......... . . -

காலில் ஏதோ இடறித் தடுக்கி விட்டது. . • , அவர் கால ஊன்றி இருந்த கல் தடம் புரள, அவர் நிலை தடு மாறிக் கீழே உருண்டு, தண்ணிர் மட்டம் வரையிலும் சென்று விட்டார். முகத்தில் தண்ணிர்த் திவலைகளும், வியர்வை முத்துக் களும் பளிச்சிட, நிலை தடுமாறி திடீரென்று விழுந்ததால் உண்டான பதற்றமும் நடுக்கமும் தெளிவாகாத நிலையில் சங்கரன் எழுந்து நின்று. 'அங்கே! அதோ!' என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டிக் கூவிஞர். - -

அங்கிருந்த அத்தனே ஜோடிக் கண்களும் அவர் காட்டிய திசையில் குறிப்பிட்ட இடத்தில் சென்று லயித்தன. - . . .

குடை ஒன்றின் வளைந்த பிடிதான் சங்கரனின் காலத் தடுக்கி யிருக்கிறது. யாரோ அல்லது ஏதுவோ காலக் கவ்வி விட்டதாகத் தோன்றி யிருக்கிறது சங்கரனுக்கு. அதுதான் அத்தனே பதற்றம் அவருக்கு ! - --

கூலியாட்கள் விடுவிடென்று இறங்கினர்கள். அந்தப் பாறைக் குவியலிலிருந்த பெரும் கற்களுே ஒவ்வொன்ருக அப்புறப் படுத்தத் தொடங்கினர்கள். சங்கரன் நிலைக் குத்தியபடி பார்த்துக் கொண்டு. தின்ருர். - - * -

குடைக் காம்பைச் சுற்றியிருந்த கற்கள் எல்லாம் நகர்த்தப் பட்டன. ஒரு குடை முழுவதும் தாறு மாருகக் கிழிந்த நிலையில் அகப்பட்டது! - - - - ... • . அதற்குக் கொஞ்சம் தள்ளி ஒரு டார்ச் விளக்கு: . . . அதற்கும் கொஞ்சம் தூரத்தில் சில வரை படங்களும் கறிப்ப களும் அவற்றிற்கும் அப்பால்......... . - - - ளு అఖిబ4