பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 95. கொன்றை வேய்ங் குழல் கோவலர் முன்றிலில் கன்று உறங்கும்...' (34). செல்வ மும் கல்வியும் : கோசல நாட்டில் பெண்கள் செல்வத்தோடு கல்வியும் நிரம்பப் பெற்றிருப்பதால், நாடோறும், வருந்தி வரும் ஏழையர்க்கு வேண்டிய உதவி புரிகின்றனர்; விருந்தும் படைக்கின்றனர். 'பெருந்தடங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருக்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே’’ (36) மலர் மொட்டாக இல்லாமல் பூத்தபிறகுதான் மணம் வீசி மகிழ்விக்கும். பெண்டிர்க்குச் செல்வமும் கல்வியும் நிரம்பிப் பூத்ததால், தம் இன்பத்தை விரும்பாமல், ஏழையர் துயரைப் போக்குகின்றனர். கலை தெரி கழகம் : இள நங்கையர் பந்தாடும் இடம் சந்தனக் காடு அன்று; சண்பக மலர்க்காடே. மயில் ஊரும் முருகனைப் போன்ற இளைஞர்கள் கலைபயிலும் கழகம், சோலைகள் அன்று; முல்லை நிலக்காடே. பாடல்: பைந்தினை இளையவர் பயில் இடம், மயில் ஊர் கந் தனை அனையவர் கலைதெரி கழகம், சந்தன வனமல - சண்பக வனமாம்; நந்தன வண்மல நறைவிரி புறவம்’ (48) பந்தினை இளையவர் பயில் இடம் சந்தன வனமல சண்பகவனம் எனவும், கந்தனை அனையவர் கலைதெரி கழகம் நந்தனவன மல நறைவிரி புறவம் எனவும் கொண்டு கூட்டிப் பொருள் செய்ய வேண்டும்.