பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பால காண்டப் காஞ்சனா, மாலதி என்னும் பெயர்கள் பெண்கட்கு உண்டு. இம்மூன்றும் ஒரே பொருளன. அடுத்தது:- "கந்தனை அனையவர் கலைதெரி கழகம் நந்தன வனம் அல-நறை விரி புறவம்' என்பதன் கருத்தாவது. ஆடவ இளைஞர்கள் கலை தெரி கழகம் நந்தனவனமே. ஆயினும், அவர்கள் மீது முல்லை மலரின் மணம் வீசுவதால், நந்தனவன மல-நறை விரி புறவம், என மாற்றிக் கூறப்பட்டுள்ளது நறை விரி புறவம் மணம் வீசும் முல்லைக் காடு. இளைஞர் மீது முல்லையின் மணம் வீசும் என்பதற்கு இலக்கியச் சான்றுகள்:-தலைவி தோழியிட்ம் சொல் கிறாள்: தலைவன் நிலவொளியிலே என் தோளைத் தழுவினான். இப்போதும், அவன் மீது இருக்கும் முல்லை மணம் என்மீது வீசுகிறது என்னும் கருத்து குறுந்தொகைப் பாடல் ஒனறில் அமைந்துள்ளது. "தட்டைப் பறையின் கறங்கு நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண்ணிலவின் மணந்தனன் மன் நெடுங்தோளே இன்றும் முல்லை முகை காறும்மே (198:3-6) இக்கருத்து சிதம்பரச் செய்யுட் கோவை என்னும் நூலிலும் உள்ளது. பாடல்: தேன்மறிக்கும் வெறித் தொங்கல் அறல் கூந்தல் திருந்திழைகண் மான்மறிக்குள் திருமேனி மலர்முல்லைப் புறவமே' (57) அடுத்து. கலை தெரிகழகம் என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். முன்னியது முடிக்கும் முருகனை ஒத்த இளைஞர்கள் கழகத்தில், படைப் பயிற்சி, நூற் பயிற்சி முதலியன பெறுகின்றார்களாம். இங்கே கழகம் என்பது, கலை பயிலும் உயர்ந்த இடமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், திருக்குறள் முதலிய நூல்களில், கழகம் சூதாடும்