பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 99 இடமாகவும், மக்களைக் கெடுக்கும் இடமாகவும் கூறப் பட்டுள்ளது. இதற்குச் சில சான்றுகள் காண்பாம். திருக்குறளில்: 'கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்' (935) 'பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்' (937) திரிகடுகத்தில்: கழகத்தால் வந்த பொருள் காமுறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல் உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு' (42) ஆசாரக் கோவையில்: 'சூதர் கழகம் அரவம் அறாக்களம் பேதைகள் அல்லார் புகர்அர் புகுவரேல் ஏதம் பலவும் தரும்' (98) சீவக சிந்தாமணியில்: 'ஆகம் தானோர் மணிப்பலகையாக முலைகணாயாகப் போகக் கேற்றபுனை பவழ அல்குல் கழகமாக ஏக இன்பக் காமக் கவறாடல் இயைவ தன்றேல் ஆக நோற்றிட் டடங்கல் ஆண்மைக்கு அழகென்பவே (101) நைடதத்தில்: கள்ளுண விரும்புதல் கழகம் சேர்தல் மால் உள்ளுறப் பிறர்மனை நயத்தல் ஒன்னலர்க்கு எள்ளரு ஞாட்பினுள் இரியல் செய்திடல் வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே' (20) இவ்வாறு இந்நூல்களில் கழகம் தாழ்ந்ததாகக் கூறப் பட்டிருப்பினும், வேறு சில நூல்களில் உயர்ந்ததாகக் கூறப்