பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 101 இந்நூற்பாவிலிருந்து உறிஞ்சி எடுத்துக் கொள்ளக் கூடிய கருத்தாவது:- படைப் பயிற்சியும் கல்விப் பயிற்சி யும் நடைபெற்ற கழகத்தில், நாளடைவில், இப்பயிற்சி ஆர்வம் குறைந்ததால் மங்கிப் போக- மறைந்து போக, அந்த இடத்தைச் சோம்பேறித் தீயவர்கள் பிடித்துக் கொண்டு சூதாடியிருப்பர். சூதாடினும், அந்த இடத்திற்குப் பழைய கழகம்’ என்ற பெயரே இருந்திருக்கக் கூடும். இது கலை தெரி கழகத்தின் வரலாறாகும். ஈண்டு, சுந்தரர் தம் தேவாரத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில், வேடர்குல இளைஞனாகிய கண்ணப்பனைக் குறிப்பிட்டு, 'கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்” எனப் பாடியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. மற்றும் ஒன்று:- இளைஞர்கள் கலைதெரி கழகம் என்னாது, கந்தனை அனையவர் கலைதெரி கழகம்’ என இளைஞர்க்கு முருகனை ஒப்புமை கூறியிருப்பதில் உள்ள பொருத்தம் என்ன என்பதையும் நோக்க வேண்டும். முருகன் அழகிய இளைஞனாகவும், போர்ப் படை (வேல்) உடையவனாகவும், போர் புரிந்தவனாகவும் கூறப்படுகின்றான். இதனைத் திருமுருகாற்றுப் படை நூலின் பிற்சேர்க்கையாகச் சில பதிப்புகளில் சேர்க்கப் பட்டுள்ள பத்துப் பாடல்களுள் முதல் பாடலில் காணலாம் பாடல்: 'குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய்-என்றும் இளையாய் அடிகியாய் ஏறுர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் துறை இந்தப் பாடலில் மற்ற சிறப்புகளோடு உள்ள என்றும் இளையாய் என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. மற்றும், என்றும் அழியாத இளமைக்கார' என்னும் திருப்புகழ்ப் பகுதியும் ஈண்டு எண்ணத் தக்கது. எனவேதான், шт—7