பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 103 நான்குமே சொரிந்ததாகக் கம்பர் கூறியுள்ளார். சொரிதல் என்பது மிகுதியாகப் பொழிதல்-கொட்டுதல் என்னும் பொருளது. வேறு பாடல் சான்று: 'வானவர் பூ மழை சொரிந்தார்' (பெரியபுராணம் - திருநகரச் சிறப்பு-45) சொரிதல் என்பது, மிகுதியோடு தொடர்ச்சியையும் குறிக்கும். நகரப் படலம் அகழி : சக்கர வாள கிரியைச் சூழ்ந்த புறக்கடலைப் போல் கோட்டை மதிலைச் சூழ்ந்திருந்த அகழி, விலைமகளிரின் மனம்போல் மிகவும் கீழே யேகியும், கல்லாதான் இயற்றிய கவிபோல் தெளிவின்றியும், யாரும் துய்க்க முடியாத திருமணம் ஆகாமலே இருக்கின்ற கன்னியரின் அல்குல் போல், யாரும் நீராட முடியாத காவலினதாகியும், நல்ல நெறியிலிருந்து விலக்கி விழுங்கும் தீய பொறிபுலன்கள் போன்ற முதலைகளை உடையதாகியும் காணப்பட்டதாம், பாடல் : 'அன்னமா மதிலுக்கு ஆழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி, பொன்விலை மகளிர் மனம்எனக் கீழ்போய்ப் புன்கவி எனத் தெளி வின்றிக் கன்னியர் அல்குல் தடம்என யார்க்கும் படிவு அரும் காப்பின தாகி, நன்னெறி விலக்கும் பொறிஎன எறியும் காத்தது கவி லலுற்றது நாம்” (13) புறவெளியில் சக்கர வாளம் என்னும் மலை இருப்ப தாகவும் அதைப் புறக்கடல் சூழ்ந்திருப்பதாகவும் கூறுவது புராணச் செய்தி. அந்தக் கடல்போல் அகழி, கோட்டை மதிலைச் சூழ்ந்துள்ளதாம். அது மிகவும் ஆழமாகக் கீழே