பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பால காண்ட ப் 1. ஆற்றுப் படலம்-கோசல நாட்டில் ஒடும் சரயு என்னும் ஆற்றின் வளம் கூறுவது. 2. நாட்டுப் படலம்-கோசல நாட்டின் வளம் பற்றியது. 3. நகரப் படலம்-அயோத்தி நகரின் சிறப்பு பற்றியது. 4. அரசியல் படலம்-தயரத மன்னனின் அரசியல் சிறப்பு பற்றியது. 5. திரு அவதாரப் படலம்-தயரதன் வேள்வி செய்தது-இராமன் முதலிய நால்வரும் பிறந்ததுபற்றியது. 6. கையடைப் படலம்!-தயரதன் விசுவாமித்திரரிடம் காட்டிற்குச் செல்ல இராமனை ஒப்படைத்தது பற்றியது. 7. தாடகை வதைப் படலம்-இராமன் காட்டில் தாடகையைக் கொன்றது பற்றியது. 8. வேள்விப் படலம் - விசுவாமித்திரர் காட்டில் வேள்வி செய்தது-அழிக்க வந்த அரக்கர்களை இராமன் கொன்றது - பற்றியது. 9. அகலிகைப் படலம்-காட்டு வழியில் சென்றபோது இராமன் ஒரு கல்லை மிதிக்க அகலிகை தோன்றியது பற்றியது. 10. மிதிலைக் காட்சிப் படலம்-விசுவாமித்திரர், இராம - இலக்குமணர் ஆகிய மூவரும் மிதிலைக்குச் சென்றது-இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டது -அன்றிரவு சீதை இராமனை எண்ணி எண்ணி ஏங்கியது-பற்றியது. 11. கைக்கிளைப் படலம்-அன்றிரவு இராமன் சிதையை எண்ணி எண்ணி ஏங்கியது பற்றியது. கைக்கிளை என்பது ஆணோ-பெண்ணோட இணையாமல், தனியே எண்ணி வருந்தும் ஒரு தலைக்காமம்’ ஆகும்.