பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 107 'தாய் ஒக்கும் அன்பின், தவம் ஒக்கும் நலம் பயப்பின் சேய் ஒக்கும் முன்னின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால், நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும், நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான்' (4) மணிவாசகர் கூறியுள்ள படி, அன்பிலே பால் நினைந் தூட்டும் தாயாவான் தவம், செய்வார்க்குப் பல நலம் தருதலால், மக்கட்கு நலம் புரிவதில் தவமாவான். பெற்றோர்க்கு முதுமையிலும் சேய் உதவுகிறான் - பெற்றோர் இறந்த பின்னும் நீர்க்கடன் முதலியன செய்தும் ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடி யும் அவர்க்கு நற்கதி கிடைக்கச் செய்கிறான்; மக்களை நன்னெறியில் உய்ப்பதில் அந்த சேய் போலாவான். கல்வி கேள்வி ஆராய்ச்சிக்கு அறிவு உதவும் என்னும் கருத்து, 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' (355) 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு (423) 'எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு' (424) ஆகிய குறள்களில் இலைமறைகாயாயிருப்பதை அறியலாம். செய் எனக் காத்தல்: ஏழை ஒருவன், தனக்கு உள்ள மிகச் சிறிய ஒரு நிலத்தை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பயிரிட்டுக் காத்தல் போல், தயரதன் நாடு முழுவதையும் இனிது காத்து அரசாண்டான். 'வையகம் முழுவதும் வறிஞன் ஒம்பும் ஓர் செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்’ (12)