பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பால காண்டப் கல்ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப் புல்லர்க்கு கல்லோர் சொன்ன பொருள்எனப் போயிற் றன்றே (49) சொல் ஒக்கும் வேகச் சுடுசரம் = துறவியர் இடும் கெடுமொழி (சாபம்) யாராலும் தடுக்க முடியாதபடி விரைந்து செயல்படுவது போல், விரைந்து சென்று தாக்கும் அம்பு ஆகும். இங்கே, 'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது’’ (29) என்னும் குறள் எண்ணத்தக்கது. அற்பர்க்கு நல்லோர் சொல்லும் அறிவுரை, ஒரு காதால் வாங்கி மறு காதால் விடப்படுவதைப்போல,நெஞ்சிலே தைத்து முதுகுப் புறமாய் வெளியாய் விட்டது அம்பு, (சிலர் மறு காதால்விடுவதில்லைஒரு காதால் வாங்கினால் அல்லவா மறுகாதால் விட முடியும்!) "புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லு வார்' (719) 'அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்' (720) என்னும் குறள்கள் ஈண்டு எண்ணத் தக்கன.

படியிடை வீழ்ந்த பதாகை:

குருதி சொரியத் தாடகை வீழ்ந்து இறந்தது, முடி குடிய இராவணனுக்குப் பின்னால் விளையப் போகும் அழிவை முன் கூட்டி அறிவிக்கும் குறியாகக் கொடி அறுந்து விழுந்தது போல் காணப் பட்டது: