பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 7 12 வரலாற்றுப் படலம்-மூவரும் சனக மன்னனின் மணி மண்டபத்தில் அமர்தல். விசுவாமித்திரர் சனகனிடம், இராமனின் முன்னோரிலிருந்து குல வரலாற்றைக்கூறியதுஇராமனின் வரலாற்றைக் கூறியது-பற்றியது. 19. கார் முகப் படலம்-இராமன் சனகனது வில்லை நாண் ஏற்றி ஒடித்துச் சீதையை மணக்கத் தகுதி பெற்றது பற்றியது, கார்முகம் = வில். 14. எழுச்சிப் படலம்-இராமன்-சீதை திருமணம் காணத் தயரதன் படைகளுடனும் மக்களுடனும் அயோத்தி யிலிருந்து புறப்பட்டு மிதிலைக்குச் செல்லுதல் பற்றியது. 15. சந்திர சயிலப்படலம்-மிதிலைக்குச் செல்பவர்கள் வழியிலுள்ள சந்திர சயிலம் என்னும் மலைப் பகுதியில் தங்கியது பற்றியது. 16 வரைக் காட்சிப் படலம்-மலைக் காட்சிகளைக் கண்டு பொழுது கழிப்பது பற்றியது. 17. பூக் கொய் படலம்-சோலைகளில் உள்ள மலர் களைக் கொய்து குடி மகிழ்வது பற்றியது. 18. நீர் விளையாட்டுப் படலம்-வழியில் நீர் நிலையில் குளித்து முழுகி இன்புறுவது பற்றியது. 19. உண்டாட்டுப் படலம்-வழியில் LJ 6\} 6\f6U)é5 உணவுகளை உண்டு மகிழ்வது பற்றியது. 20. எதிர் கொள் படலம் -மாப்பிள்ளை வீட்டாரைப் பெண் வீட்டார் (சனகன்) எதிர் கொண்டு வரவேற்பது பற்றியது. 21. உலாவியல் படலம் - இராமன் பெண்டிர் பலர் கண்டு மயங்கும்படி தெருவில் உலாப் போந்தது பற்றியது. 22. கோலம் காண் படலம்- சீதையின் மணக்கோல அழகை அனைவரும் கண்டு மகிழ்வது பற்றியது. 23. கடி மணப் படலம்-திருமணம் பற்றியது.