பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பால காண்டப் விழுந்தது என்பது புராணச் செய்தி. சிவன் தலையில் கொங்கை அணிந்திருப்பவன். கொன்றை வேந்தன் அல்லவா சிவன் கொன்றை மலர் பொன்னிறமானது. எனவே பொன்னிறமான கொன்றையணிந்த சிவன் தலையிலிருந்து விழும் கங்கையும் பொன்னிறக் கொங்கை மலர்களை அடித்துக் கொண்டு வருகிறது. அதனால் கங்கை மேலோட்டமாகப் பார்ப்பதற்குப் பொன்னிறமாகத் தெரிகிறது; அதனால் பொன்னியைப் போன்றுளது என்று கம்பர் ஒப்புமைக் காரணம் கூறியுள்ளார். கம்பர், பாடலின் வாயிலாக வடக்கே சென்றும், தம்மை வளர்த்த காவிரியை மறக்கவில்லை. காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் உண்டு. அப்பெயர் எவ்வாறு வந்தது? காவிரி நீரை மேலோட்ட மாகப் பார்த்தால் பொன் துகள் மின்னும். காவிரிக்கரை யில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த நான், நிறைநீர் வருங் காலத்தில் இந்தத் தோற்றத்தை நேரில் கண்டு வியந்துள்ளேன். இதற்கு இலக்கியச் சான்றுகளும் உள்ளன. பட்டினப் பாலைஎனும் சங்க நூலில்,

புனல் பரந்து பொன்கொழிக்கும்

விளைவறா வியன்கழனி' (7,8) பொன் கொழிக்கும் என்பதற்கு, செல்வம் கொழிக்கும் என்னும் பொருளும் கூறலாம் எனினும், பொன்னிறப் புனல் கொழிக்கும் என்னும் பொருளும் மறைந்துள்ளது. மற்றும் ஓர் எடுத்துக்காட்டு பாரதிதாசனது பாடலில் உளளது: 'பொன்விளைந்தாற் போலும் நறும்பொடி விரிந்த......காவிரி' என்பது அவரது பாடல் பகுதி. பொன் போன்ற பொடி (துகள்) காவிரி நீரில் கலந்துள்ளது என்னும் செய்தி இப்பாடலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே,