பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 117 கங்கையையும் காவிரியையும் கம்பர் ஒப்புமையாக்கி உள்ள பொருத்தத்தை இவற்றால் அறியலாம். மிதிலைக் காட்சிப் படலம் ஆடக அரங்கு : மூவரும் மிதிலை நகரின் தெருக்களில் சென்று கொண்டிருந்தபோது பலவகைக் காட்சிகளைக் கண்டார் களாம். அவற்றுள் ஒன்று நடனம் ஆடும் அரங்கக் காட்சி. பெண்டிர் நடனம் ஆடுங்கால், பாடல் இசை, வீணை இசை, மத்தள இசை முதலியவை ஆடலுக்கு ஏற்ப இசைக்கப்படுகின்றன. மங்கையர் கைவழி கண் செல்ல, கண்வழி மனம் செல்ல, ஆடினராம்: நெய்திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க, கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயநுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்' - (8) மனம் செல்லும் வழியில்தான் கண்ணும் கையும் செல்லவேண்டும். ஆனால், இங்கே, கைவழி-கண்வழி மனம் சென்றதாகக் கூறப்பட்டிருப்பது, அம்மகளிர்க்கு உள்ள ஆடல் பயிற்சியின் மிகுதியை அறிவிக்கிறது. மனம் ஒன்றாத வழி உறுபுக்களின் செயல்களால் பயன் விளையாது. மனம் ஒன்றிய வழியில் பலகாலும் உறுப்புகள் செயல்பட்டிருக்குமாயின், மனம் வேலை செய்யாதிருப்பி னும், உறுப்புகள், இயந்திர இயக்கம்போலத் தம்மில் தாமே இயங்கும். பயிற்சி மிகுதியால் விளையக்கூடியது இது. எனவே, இப்பாடலால், ஆடும் மகளிரின் ஆட்டத் திறமையின் மிகுதி கூறப்பட்டுள்ளது. தட்டச்சு அடிப்பவர் கண்களால் பார்க்காமலேயே கைவிரல்களால் பொத்தானைத் தட்டுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது. шт—8