பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 119 கம்பர் இப்பாடலில், கடைத் தெருவிற்கு ஆற்றை உவமித்துள்ளார். இது முன்னோர் சென்ற பாதை.

ஆறுகிடந்தன்ன அகல் நெடுங் தெரு'

என்னும் அடி, நெடுநல் வாடையிலும் (30), மதுரைக் காஞ்சியிலும் (359), நற்றிணையிலும் (200-3.) உள்ளன. ஆறெனக்கிடந்த தெரு’ என்பது மலைபடு கடாம் நூலில் (481) உள்ளது. பெருந்தொகை நூலில், ஆறு கண்ட ன்ன அகன்கணை வீதி' (2-7-7) "நீத்தியாற்றன்ன நெடுங்கண் வீதி' (5-7-23) என ஈரிடத்தில் உவமை கூறப்பட்டுள்ளது. முன்னோர் சென்றுள்ள பாதையில் கம்பரும் சென்றுள்ளார். அடுத்த காட்சி: குதிரைகள் ஒன்றன்பின் ஒன்றாய் மண்டல கதியில் வட்டமாய்த் தொடர்ந்து மிகவும் விரைவாக ஒடிக்கொண்டிருந்ததை மூவரும் கண்டனர். கொட்புறு கலினப் பாய்மா, குலால்மகன்முடுக்கிவிட்ட மட்கலத் திகிரிபோல, வயின்வயின், வருவ, மேலோர் நட்பினின் இடையறாவாய், ஞானிகள் உணர்வின் ஒன்றாய்க் கட்புலத்து இனைய என்று தெளிவில திரியக் கண்டார்’ (12) கொட்பு= சுழற்சி. கலினம் = கடிவாளம். பாய்மா = பாயும் குதிரை. குலால் மகன் = குலாலன் = குயவன். திகிரி = ஆழி. மண்டல கதியில் வட்டமாய் ஒடும் குதிரை கட்கு, குயவன் கலங்கள் செய்யச் சுழற்றும் ஆழி (சக்கரம்) ஒப்புமையாகும். இடையறாமல் தொடர்ந்து திரிவதற்குப் பெரியோர்களின், நட்பு உவமையாகும். ஈண்டு, நறுந் தொகை என்னும்,வெற்றிவேற்கை நூலில் உள்ள