பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பால காண்டப் பேடோடு அன்னம் : மூவரும் மிதிலைக்குள் சீதை இருக்கும் கன்னிமாடம் உள்ள தெருவழியே நடந்து சென்றனர். பொன் ஒளியும், மலர் மணமும், தேன் சுவையும், கவி-இசை இன்பமும் போன்றவளாகிய சீதை, பெடையோடு அன்னச் சேவல் ஆடுகின்ற துறையைப் பார்த்தபடி, அதன் அயலிலே மாடியில் நின்று கொண்டிருந்தாள். அவளை இராமன் நோக்கினான். பொன்னின் சோதி போதினின் நாற்றம், பொலி பூவின் தென்னுண் தேனின் தீஞ்சுவை, செஞ்சொற் கவியின்பம் கன்னிம் மாடத்து உம்பரின் மாடே. களிபேடோடு அன்னம் ஆடும் முன்துறை கண்டங்கு அயல் கின்றாள்' (23) ஐம்புல இன்பமும் பெண்ணால் பெறலாம் என்ற கருத்தில், . 'கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' (1101) என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இங்கே கம்பர் பாடலில், நான்கு புலன்களின் இன்பம் போன்ற இயல்புடையவள் சீதை என்னும் கருத்து குறிப்பாய் அமைந்துள்ளது. பொன்னின் சோதி= கண்புலம். போதினின் நாற்றம்= மூக்கின் புலம்,தேனின் சுவை = நாக்கின் புலம். செஞ்சொல் கவி இன்பம்= செவிச் சுவை. இவ்வளவு சிறப்புடையவளாம். சீதை. தொடாமையால் ஊறு இல்லை. இவள் பெடையோடு அன்னச் சேவல் ஆடுவதைக் கண்டு கொண்டிருந்தாளாம்.இது ஒரு முன்னோட்டச்செயல். அதாவது, இன்னும் சிறிது நேரத்தில், அன்னச் சேவலும் அதன் பெடையும் போல இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் ஊன்றி நோக்கப் போகிறார்கள். இந்தக் குறிப்பு, பேடோடு அன்னம் ஆடும் என்பதில் அமைந்துள்ளது.