பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 123 அன்னச் சேவலும் பெடையும் விளையாடுவதுண்டு என்பதை, மணிமேகலையில் உள்ள,

அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை அடக்க' (5-123, 124)

என்னும் பாடல் பகுதியாலும் அறியலாம். இந்தச் செய்தி, பின்னால், கி ட் கி ந் தா காண்டம்நாடவிட்ட படலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீதை யைத் தேடப் புறப்பட்ட அனுமனிடம், இராமன், சில செய்திகளை அடையாளத்திற்காகச் சீதையிடம் சொல்லும்படி அறிவிக்கிறான். அவற்றுள் இஃதும் ஒன்று. அதாவது:-மிதிலையில் சனகனது வேள்வியைக் காணச் சென்றபோது, அன்னம் ஆடும் துறைக்கு அருகே கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதையை யான் கண்டதையும் நினைவு படுத்துவாயாக-என்று இராமன் கூறினானாம்: 'முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலைவாய், சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல, அன்னம் ஆடும் துறைக்கு அருகு கின்றாளை அக் கன்னி மாடத்திடைக் கண்டதும் கழறுவாய்' (67) என்பது பாடல். இது கம்பரின் இராமாயணச் செய்தி. இன்னும் பலவிதமாக இராமாயணக் கதை சொல்லப் படுகிறது. அன்னங்கள் ஆடும் நீர்த்துறையில் இராமனும் சீதையும் கண்டார்கள் என்பது ஒரு கதை. நலம் பழுதாகாது: சதானந்த முனிவர் சனகனிடம் இருக்கும் வில்லைப் பற்றிக் கூறிவருகிறார். இந்த வில் சனகனிடம் வந்ததி லிருந்து இன்று வரையும் எந்த அரசகுமரரும் வில்லருகே சென்றிலர்; போய் ஒளிந்தனர், திரும்பவில்லை. எனவே, சீதைக்கு இனித்திருமணம் கைகூடாது என இருந்தோம். ஆனால், இந்த இராமன் வில்லில் நாண் ஏற்றுவானானால் சீதையின் பெண் நலம் வீணாகாது-என்று கூறினார்: