பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பால காண்டம் 24. பரசுராமப் படலம்-திருமணம் முடிந்த பின்னர், தயரதன் மணமக்களுடனும் மற்றவருடனும் மிதிலை யிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச் செல்லும் வழியில், அவனுடைய குலப் பகைவனாகிய பரசுராமன் வந்து எதிர்க்க, அவனை இராமன் வெற்றி கொண்டது பற்றியது. வேறுபாடுகள் கம்பராமாயணத்தின் சில படலங்கட்கு வேறு பெயர் கள் தரல், ஒரு பதிப்பாளர் ஒரு அடலத்தின் இறுதியில் அமைத்திருக்கும் பாடல்களுள் சிலவற்றை வேறு பதிப்பாளர் அடுத்த படலத்தின்தொடக்கத்தில் அமைத்தல்; ஒரு பதிப்பாளர் ஒரு படலத்தின் தொடக்கத்தில் அமைத் திருக்கும் பாடல்களுள் சிலவற்றை வேறு பதிப்பாளர் முன் படலத்தின் இறுதியில் அமைத்தல், பாடல்களிலே சில தொடர்களும் சில சொற்களும் பதிப்புக்குப் பதிப்பு வேறு பட்டிருத்தல், பாடல்களின் எண்ணிக்கையில் ஏற்றத் தாழ்வு உள்ளமை, சில பதிப்புகளில் இல்லாத பாடல்கள் வேறு பதிப்புகளில் உள்ளமை முதலிய பல வேறுபாடுகள் கம்பராமாயணப் பதிப்புகளில் உள்ளன. பால காண்டம் இதற்கு விதிவிலக்கு அன்று. கம்பராமாயணம் பதினாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் உடைமையால், இடத்திற்கு இடம்-ஆளுக்கு ஆள் சுவடிகளைப் பெயர்த்து எழுதும்போது இவ்வா றெல்லாம் வேறுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. இடைச் செருகலாகச் சில பாடல்கள் சிலரால் சேர்க்கப்பட்டிருப்ப தாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட சுவடிகள் இருத்தலின், சுவடிக்குச் சுவடி குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம், கம்பராமாயணம் ஒரு. காலத்தில் நாடு முழுவதும் பரவலாகப் பயிலப்பட்டது என்னும் உண்மையை அறிவிக்கின்றன. கம்பரும் வால்மீகியும் : வால்மீகி இராமாயணத்தின் வழி நூலே கம்ப. ராமாயணம். எனினும், கம்பர் வால்மீகியினும் சிற்சில: