பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பால காண்டப் அதனால் குதிரைகள் விரைவில் இறந்து போக, வேறு குதிரைகளை வாங்குவர் என்பதாக ஒரு செய்தி சொல்லப் படுவதுண்டு. கம்பர் துருக்கர் தர வந்த (18) எனக் கூறியுள்ளார். வரைக் காட்சிப் படலம் பிடிக்கு உணவு : தந்தங்களை உடைய ஆண் யானைகள், தம் தும்பிக்கையால் மரக்கிளைகளைத் தழையோடு ஒடித்துப் பெண் யானைகட்குக் கொடுத்தனவாம். கொம்புகள் பணைக்கை நீட்டிக் குழையொடும் ஒடித்துக் கோட்டுத் தும்பிகள் உயிரே அன்ன துணைமடப் பிடிக்கு நல்கும்’ (2) கோட்டுத் தும்பி= களிறு-ஆண் யானை. பிடி=பெண் யானை. பிடிக்குக் களிறு உணவு தேடித்தருவதாகக் கம்பர் கூறியிருப்பது ஒருவகைத் தமிழ் இலக்கிய மரபாகும். கலித் தொகையில், 'துடியடிக் கயங்தலை கலக்கிய சின்னிரைப் பிடியூட்டிப் பின் உண்ணும் களிறு” (11–8,9) 'ஒடுங்கா எழில்வேழம் வீழ்பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து நெடுஞ்சினைத் தீங்கண் கரும்பின் கழைவாங்கும் (40-26, 27, 28) எனவும், பூதத்தாழ்வாரின் திருவந்தாதியில், பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று இருகண் இளமூங்கில் வாங்கி-அருகிருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் வான்கலங்த வண்ணன் வரை' (75) எனவும், திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலில்,