பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 127 'சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை, மந்த மடப்பிடியின் வாய்கொடுப்ப-வந்ததன் கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு' (32). எனவும் எழுதப்பட்டுள்ள பகுதிகள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கன. கம்பரும் இந்த மரபை விட்டாரிலர். துணை மடப்பிடி’ என்னும் கம்பர் கூற்று, மனைவியை வாழ்க்கைத் துணை' என்னும் திருவள்ளுவரின் கூற்றை நினைவூட்டு: கிறது, கணித் தொழில் : கொடிச்சியர்க்கு (மலைவாழ் பெண்கட்குக்) கணித் தொழில் (சோதிடம் கூறும் தொழில்) புரியும் வேங்கை மரப் பூக்களில் தேன் உண்ட வண்டுகள், வெறுப்புற்று மாறுதல் விரும்பிச் சுரபுன்னை மலர் என்று விண்மீன்களை எண்ணி வானில் தாவினவாம்.

பண்மலர் பவளச் செவ்வாய்ப் பனிமலர்க்குவளை அன்ன

கண்மலர் கொடிச்சிமார்க்குக் கணித்தொழில் புரியும் வேங்கை, உண்மலர் வெறுத்த தும்பி, புதிய தேன் உதவும் நாகத் தண்மலர் என்று வானத் தாரகை தாவும் அன்றே' (3) நாகம் = சுரபுன்னை. தாரகை = விண்மீன். வேங்கை கணித் தொழில் புரிவதாகக் கூறுவதும் தமிழ் இலக்கிய மரபாகும். கணி என்பது நாளைக் கணிக்கும் சோதிடனைக் குறிக்கும். வேங்கை மரமும் நாள் அறிவித்தலால் கணி' என்னும் பெயர் உடையது. வேங்கை மரம் பூத்தால், மணம் புரியும் நல்ல நாள் வந்து விட்டது என மக்கள் அறிவராம். அந்த நல்ல நாளில் திருமணம் நடைபெறுமாம். தினை அறுவடை செய்யும் நாள் வந்துவிட்டது என்பதை.