பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பால காண்டப் யும் வேங்கை பூத்து அறிவிக்குமாம். இங்கே, பழமொழி நானூறு என்னும் நூலில் உள்ள. 'பன்னாளும் கின்ற விடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்' (234) என்னும் பகுதியும், திருக்கோவையாரில் உள்ள, 'மாதிடங் கொண்டு அம்பலத்து கின்றோன் வடவான் கயிலைப் போதிடங் கொண்ட பொன்வேங்கை திணைப்புனம் - கொய்க என்று தாதிடங்கொண்டு பொன் வீசித்தன் கள்வாய் சொரிய கின்று சோதிடங் கொண்டு இது எம்மைக் கெடுவித்தது துமொழியே (138) என்னும் பாடலும் ஒப்பு நோக்கத் தக்கன. வேங்கையும் பூத்தது-திங்களும் முழுமை (பருவம்) அடைந்தது. இனி மணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தோழி தலைவனுக்குக் குறிப்பாய் அறிவிக்கும் பொருளில் அகநானூற்றில் உள்ள, வேங்கையும் ஒள்ளினர் விரிந்தன நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே' (2) என்னும் பாடல் பகுதியும் ஈண்டு எண்ணத் தக்கது. வேங்கையை வெறுத்த வண்டு சுரபுன்னையை விரும்பிய தாகக் கம்பர் கூறியுள்ளார். ஈண்டு, புது மலர் தேடும் வண்டே போல்’’ என்னும் கலித் தொகைப் பாடல் பகுதி ஒப்பு நோக்கற் பாற்று.(வளர பிறையில் திருமணம் முதலிய நல்வினைகளைச் செய்வதன் உண்மை நோக்கம், அப்போது நிலவு ஒளி உதவும் என்பதனால் என்னும் கருத்து, நெடுவெண் திங்களும் ஊர் கொண்டன்றே? என்னும் அகப்பாடல் பகுதியால் அறியப்படும்.)