பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 129, உண்டாட்டுப் படலம் உறுஞ்சும் தாள் : அயோத்தியிலிருந்து மிதிலை செல்பவர்கள் பலவிதமான உணவுகளை உட்கொண்டனர். கருமிகளிடத்தில் உதவி கேட்டு இரவலர்கள் ஒலியெழுப்புவதுபோல், வண்டுக் கூட்டங்கள் ஆரவாரித்தன. பெண் ஒருத்தி, வாய் திறந்து வாயால் மது உண்ணக் கூசி, செங்கழுநீர் மலர்த் தண்டி னால், மதுவை உறிஞ்சி உட்கொண்டாளாம். வான்தனைப் பிரித லாற்றா வண்டினம், வச்சை மாக்கள் என்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப, தேன்தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்' (19) வச்சை மாக்கள் = கருமிகள். நாளத்தாள் = மலருக்குக்கீழே நீளமாக உள்ள தண்டு. இரவலர்க்குக் கருமிகள் உதவாதது போலவே, கள்ளில் வண்டுகள் மொய்க்காதபடி இவள் ஒட்டி உட்கொண்டாள். வாய் திறக்காமல் மலர்த் தண்டினால் உண்பதால் வாயில் வண்டுகள்-ஈக்கள் மொய்க்கா. இவ்வாறு அருந்துவது நாகரிகமாகவும் இருக்கும். இக்காலத்தார் (Straw-Stem) அருந்தப் பயன்படுத்துவது. அக்காலத்தும் இருந்திருக்கிறது. அன்றிலோடு ஒத்தி : கணவனைப் பிரிந்து எங்கோ ஒரு பக்கத்தில் இருக்கும் பெண் ஒருத்தி, தன் கிளியைத் தழுவி, கிள்ளாய்! நீ என் உயிரைப் போய் அழைத்து வர மாட்டாயா? அன்றிலைப் போலவே எனக்குத் துன்பம் தருகிறாய் என்று சினத்துடன் அழுதாளாம்:

  • மன்றல் நாறு ஒருசிறை இருந்து ஓர் வாணுதல்

தன்துணைக் கிள்ளையைத் தழீஇ என் ஆவியை