பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பால காண்டப் இன்றுபோய்க் கொணர்கிலை, என்செய்வாய் எனக்கு அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் (28) என் உயிரைக் கொண்டுவா என்பதற்கு, என் உயிராக இருக்கும் கணவனிடம் தூது சென்று அழைத்து வா என்பது பொருளாகும். ஒரு சுவையான செய்தி இது. காதலி காதலனிடம் தூதுவிடும் பொருள்களுள் கிளியும் ஒன்று. கிள்ளை விடு தூது’ என்னும் பெயரில் ஒரு முழு நூலே உள்ளது. தனித் தனிப் பாடல்களிலும் இந்த அமைப்பு உண்டு. ஞான சம்பந்தர் தன்னை நாயகி யாகக் கருதி நாயகனாகிய சிவனைப் பற்றிச் சொல்லும்படி கிளியைக் கேட்டதாக உள்ள பாடல் பகுதி வருமாறு: 'சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால் முறையாலே உணத் தருவேன்'-(தோணிபுரம்-10) கிளியே! நீ அன்றில் பறவைபோல் எனக்குத்துன்பம் தரும் பொருளாகி விட்டாயே-என்பதன் விளக்க மாவது: . ஆண் அன்றில் சிறிது நேரம் பிரிந்திருந்தாலும் பெண் அன்றில் அதனைக் கூவிக்கூவி அழைத்துக்கொண்டே இருக்குமாம். நள்ளிரவில், பிரிந்து வருந்துகிற காதலர்கள், என்றும் ஒன்றியிருக்கும் அன்றில் இணையின் ஒலியைக் கேட்டுப் பொறாமை உள்ளத்துடன், இவை பெற்ற பேறு நாம் பெறவில்லையே என்று பெருமூச்செறிந்து நைந்து உருகுவார்களாம். இதற்கு இலக்கியச் சான்றுகள் சில வருமாறு:- குறுந்தொகையில் உள்ள நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு தடவின் ஓங்குசினைக் கட்சியில் பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்து-" (160)