பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 131

  • மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை

அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர் கொல் வாழி தோழி' (177) ‘கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல் வயவுப் பேடை அகவும் பானாள் கங்குல் துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே (301) என்னும் பாடல் பகுதிகளும், நற்றிணையில் உள்ள*பெடைபுணர் அன்றில் இயங்கு குரல் அளைஇக் கங்குல் கையறவு தங்தன்று' (152–7, 8) * இன்னும் தமியேன் கேட்குவன் கொல்லோ பரியரைப் பெண்ணை அன்றில் குரலே' (218–10, 11) 'துணைபுணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும் துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் நம்வயில் வருந்து நன்னுதல் என்ப' (303-5, 6, 7) 'மையிரும் பனைமிசைப் பைதல வுயவும் அன்றிலும் என்யுற நரலும்' (335–7, 8) என்னும் பாடல் பகுதிகளும், அகநானூற்றில் உள்ள 'சேவலொடு புணராச் சிறு கரும் பேடை இன்னாது உயங்கும் கங்குலும்' (270–13, 14) என்னும் பாடல் பகுதியும், மணிமேகலையில் உள்ள 'அன்றில் பேடை அரிக்குரல் அழைக்கச் சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப' (5–127, 128) என்னும் பகுதியும், பிற்காலத்து மனோன் மணியத்தி லுள்ள "எங்கிருந்தன. இவ் வன்றில் பேய்கள் நஞ்சோ நாவிடை நெஞ்சம் துளைக்கும்??