பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பால காண்டப் திகள் தசக்கர = திகடச் சக்கர என்ற கந்த புராணக் காப்புச் செய்யுளின் தொடக்கத்தில் உள்ள மாற்றொலியும், சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீழ் உடையும் கீள் உடையும்' - என்னும் ஞானசம்பந்தரின் பாடலில் உள்ள மாற்றொலியும், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர்' என்னும் குறள் பகுதியும் (464) இன்ன பிறவும் கவனிக்கத் தக்கன. தமிழில் 'ழ' ஒலி கன்னடத்தில் ள ஒலியாகவும் தெலுங்கில் ட' ஒலியாகவும் ஒலிப்பதுண்டு. எடுத்துக் காட்டுகள்:- ஏழு தமிழ்- ஏளு கன்னடம்- ஏடு தெலுங்கு. கோழி தமிழ்- கோளி கன்னடம்- கோடி தெலுங்கு, கூழு தமிழ்- கூளு கன்னடம்- கூடு தெலுங்கு. சோழர் களுள் தெலுங்குச் சோடர் என்ற பிரிவினர் இருந்ததான வரலாறு உண்டு. இந்த அடிப்படையில், கம்பர் பாடலில் சோழர் சோளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். வேறு பதிப்பில் சோழர் என இருப்பதும் கருதத் தக்கது. மற்றும் ஒன்று;- தமிழ் மன்னர் மூவரையும் குறிப்பிடுபவர் சிலர், சேர சோழ பாண்டியர் என்ற முறை வைப்பைக் கையாள்கின்றனர். ஆ ன ல், தொல்காப்பியம், (போந்தை வேம்பே ஆரென வரூஉம்), புறநானூறு, சிறுபாணாற்றுப் படை முதலிய நூல்களில், சேரர்-பாண்டியர்- சோழர் என்ற வைப்பு முறையே உள்ளது. கம்பரது இப்பாடலிலும், சேரலர் - தென்னவர் - சோளர் என்ற முறையே பின்பற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தக்கது. பன்னாட்டு மன்னர்கள்: மேல் பாட்டில் கூறியவர்களைத் தொடர்ந்து மேலும் இரு பாடல்களில் பன்னாட்டு மன்னர்களின் பட்டியலைத் தருகிறார் கம்பர்: