பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

^136 பால காண்டப் அமிழ்தினைச் சுவை செய்தென்ன அழகினுக்கு அழகு. செய்தார் இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ' (3) இங்கே, திருக்குறளிலுள்ள 'பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணி எவனோ எதில தந்து' (1089) என்னும் பாடலும், கல்வி அழகே அழகு யாரே அழகுக்கு அழகு செய்வார்’ என்னும் முன்னோர் மொழி களும் ஒப்பு நோக்கத் தக்கன. உண்டா-இல்லையா? சீதையின் இடுப்பிற்கு (இடைக்கு) மேலே கொங்கைகள் (மார்பகங்கள்) உள்ளன. கொங்கைகளின் மேலே அணி அணிவித்தல்-தொய்யில் எழுதுதல் முதலிய செயல்களால் கொங்கைகள் மேலும் சுமையுடையனவாய்த் துன்பப்படும் படித் தோழியர் அணி செய்தனர். சீதைக்கு இடை உண்டோ-இல்லையோ என்று ஐயுறும்படி மெல்லிதாய் உள்ளது. மேலே கொங்கைகள் இருப்பதால், அவற்றைத் தாங்கும் இடை உண்டு எனக் கருத்தளவையில் (அனுமானப் பிரமாணத்தால்) உணரலாம், இந்தக் கருத்தை நூலாசிரியர்கள் பலர் தம் நூல்களில் கூறி யுள்ளனர். கம்பரும் இளைத்தவர் அல்லர். இங்கே அருமையான ஓர் ஒப்புமை கூறியுள்ளார் கம்பர். மக்களுள் ஒரு சாரார் கடவுள் உண்டு என்றும், மற்றொரு சாரார் கடவுள் இல்லையென்றும் கூறுதல்போல், சீதைக்கு இடை உண்டா-இல்லையா என்று ஐயுறும்படி இருந்தது என்று உவமை கூறியுள்ளார் கம்பர். . சில்லியல் ஓதி கொங்கைத் திரள்மணிக் கனகச் செப்பில் வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின் தீட்டிப்