பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பால காண்டப் கேகயன் மகளுமாகிய கைகேயியைத் தன்னைப் பெற்ற தாயினும் மேலாக மதித்து முதலில் வணங்கினானாம் அடுத்துக் கோசலையையும் பின்னர்ச் சுமித்திரையையும் வணங்கினானாம். . கேகயன் மாமகள் கேழ்கிளர் பாதம் தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி ஆயதன் அன்னை அடித்துணை குடித் தூய சுமித்திரை தாள்தொழ லோடும்' (94) கைகேயியை முதலில் வணங்கியது ஏன்? இராமன் தன் தாய் கோசலையினும் கைகேயினிடமே. மிக்க அன்பு செலுத்தினான் கைகேயியும் தன் மகன் பரதனினும் இராமன் மேலேயே மிக்க அன்புகொண்டிருந்தாள். இதற்கு ஏற்ப, இங்கே கைகேயியை முதலில் வணங்கினான். கைகேயிக்கு முதன்மை கொடுப்பது, காப்பியத்தில் சூடுபிடிக்கும் பகுதியாகும். பரசு ராமப் படலம் பறவைக் குறி திருமணம் முடிந்ததும், தயரதன் மணமக்களுடனும் மற்றவர்களுடனும் மிதிலையிலிருந்து அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்ற வழியில், மயில் முதலிய சில பறவை கள் வலப்புறமாகவும், காகம் முதலிய சில பறவைகள் இடப்புறமாகவும் குறுக்கிட்டுச் சென்றனவாம்; இதைச் கண்டதும், ஏதோ இடையூறு வரப்போகிறது என்று எண்ணி, மேற்செல்லாமல் தேரை நிறுத்திவிட்டான்:

  • ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில், இடமும் காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான் நாகம் அனன் இடை இங்கு உளது இடையூறு என

நடவான் மாகம் மணியணி தேரொடு கின்றான் நெறிவந்தான்' (5)