பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 147 கூட்டிலே குருவி மாணிக்கத்தை விளக்காக வைப்ப தான ஒரு கருத்து கச்சியப்பரின் கந்த புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. காட்டில் எளிதுற்ற கடவுள் மணியைக் கொணர்ந்து கூட்டில் இருளோட்டக் குருகுய்த்த வாறன்றோ!' என்பது பாடல் பகுதி. இப்படி ஒரு செய்தியைக் கம்பரும் பின்னால் கிட்கிந்தா காண்டத்தில் கூறியுள்ளார். நகரப் படலம் புறாவின் ஊடல் : அயோத்தி நகரத்து மாடங்களின் உச்சியில் உயிர் உள்ள புறாக்களும் உள்ளன; ஒவியப் புறாக்களும் உள்ளன. உயிர் உள்ள பெண் புறா ஒன்று, தன் காதலனாகிய சேவல் புறாவை அழைத்ததாம். ஆனால் சேவல் புறா, ஒவியத்தில் உள்ள பெண் புறாவை உண்மையான புறா என்று எண்ணி அந்த ஒவியத்தின் பக்கத்திலேயே இருந்த தாம். இதைக் கண்ட உயிருள்ள பெண் புறா,தன் காதலன் வேறொரு பெண் புறாவை விரும்பி அதன் பக்கத்திலேயே இருப்பதாக எண்ணி ஊடல் கொண்டு கற்பகச் சோலைக் குள் புகுந்து மறைந்து கொண்டதாம். கதாவில் பொன்தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்குதாள் பூ வுயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால் - ஆவி ஒத்த சேவல், கூவ அன்பின் வந்து அணைந்திடாது ஓவியப் புறாவின் மாடு இருக்க, ஊடு பேடையே’’ (22) உயர்ந்த மாடங்களில் புறாக்கள் இருப்பதைக் காணலாம். அதை நினைவில் வைத்துக் கொண்டு கம்பர் பாடியுள்ளார். ஒவியத்தில் உள்ளதை உண்மையானது என்று எண்ணி ஏமாந்து போனதாகக் கதைகள் கூறுவதுண்டு. ஊடல் கொண்ட பெண் புறா, நல்வினை