பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பால காண்டப் புரிந்தோர் தங்கும் தேவ உலகத்தில் உள்ள கற்பகச் சோலையில் புகுந்தது என்பதைக் கொண்டு, அந்த மாடம் மிகவும் உயர்ந்துள்ளது என்று எண்ணலாம். மாடப் புறா? என்னும் வழக்காறும் ஈண்டு எண்ணத்தக்கது. இது பற்றிப் பாரதிதாசனும் தமது அழகின் சிரிப்பு’ என்னும் நூலில் புறா என்னும் தலைப்பில் பாடியுள்ளார். ஒரு பெண் புறா தனக்கென்று தான் வரித்துக்கொண்ட ஓர் ஆண் புறாவைத் தவிர, வேறு ஆண் எதையும் நெருங்க விடாதாம். அதே போலச் சேவல் புறாவும் தன் பெடையைத் தவிர, வேறொரு பெடை எவ்வளவுதான் கவர்ச்சியா யிருப்பினும் அதனைத் திரும்பியும் பார்க்காதாம். புறாக் களுள் ஆணாகட்டும்- பெண்ணாகட்டும் தன் துணை இறந்து விட்டால்தான் மற்றொன்றைத் துணையாகக் கொள்ளுமாம்: ஒரு பெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக்கு உடன்படாதாம் ஒரு பெட்டை மத்தாப்பைப் போல் ஒளி புரிந்திட கின்றாலும் திரும்பியும் பார்ப்பதில்லை; வேறொரு சேவல்; தம்மில் ஒருபுறா இறந்திட் டால்தான் ஒன்றுமற் றொன்றை நாடும்' இந்தச் சுவையான பாடல் ஈண்டு கம்பரின் பாடலோடு ஒப்பு நோக்கத் தக்கது. தேய் பிறை: திங்கள் பதினைந்து நாள் வளர்ந்து செல்வதை வளர்பிறை என்றும், 15 நாள் தேய்ந்து செல்வதைத் தேய்பிறை என்றும் மக்கள் வழங்குகின்றனர். இவ்வாறு நிகழ்வது திங்கள் மண்ணுலகைச் சுற்றுவதால் என்பது இக்காலத்தில் அறிந்த செய்தி. ஆனால், முற்காலத்தில்,