பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பால காண்டப் இது தொடர்பாக ஒரு கதை சொல்வதுண்டு. பாடகர் ஒருவர் இப்படித்தான் உறுப்புகளை என்னென்னவோ போல் இயக்கிப் பாடிக் கொண்டிருந்தாராம். அவரைப் பார்த்த பாமரன் ஒருவன், என் ஆடு இப்படித்தான் கோணக் கோண இழுத்தது; அதற்குச் சூடு போட்டதும் சரியாய்ப் போயிற்று; அதுபோல் இவருக்கும் சூடு போட்டால் நன்றாகி விடுவார் என்று கூறினானாம். 'இசை மரபு என்னும் நூலில் பாடுவோர்க்கு இருக்க வேண்டிய இயல்பு கூறப்பட்டுள்ளது. பாடல்: 'கண்ணிமையா, கண்டம் துடியா, கொடிறசையா, பண்ணளவும் வாய்தோன்றா, பல் தெரியா எண்ணிலிவை: கள்ளார் நறுந்தெரியல் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாடல் உணர்' என்பது பாடல். கின்னரம் என்னும் பறவை வானம்பாடி போல் இசைபாடும்; இசை இன்பத்தைத் துய்க்கும். அந்தப் பறவையே மங்கையரின் பாடலைக் கேட்டு மயங்கு கின்றதாம். பூக்கொய் படலம் பெண்களின் ஊடல்: தெங்கு இளநீரைக் கண்ட ஒருவன், இது மாதரின் கொங்கைபோல் உளது என்று கூற, அதைக் கேட்ட அவன் மனைவி, எந்த மாதரின் கொங்கைபோல் உளது என்று கேட்டு, தன்னினும் வேறு பெண்ணோடு அவனுக்குத் தொடர்பு உண்டு போலும் என்றெண்ணி ஊடல். கொண்டாள். மற்றோர் ஆடவன், மலர் கொய்து கொண்டிருந்த போது, அவன் மனைவி பின்னால் வந்து அவன் கண் களைப் பொத்த, அவன் யார் என்று வினவ, கண்ணை