பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 11 நீக்கிவிடின், உயிரும் உயிர்மெய்யுமாக மும்மூன்று எழுத்துகள் இருக்கும். இஃது ஒர் அழகான அமைப்பாகும். நாங்களே என எல்லாரையும் உள்ளடக்கிக் கூறிய கம்பர் உலகப் பொது நோக்கு உடையவர் என்பது, அவர், 'உலகம்' என முதல் பாடலைத் தொடங்கியிருப்பது புலப்படுத்துகிறது. உயரிய பொது உள்ளம் உடைய வர்கட்கு இது இயற்கை. திருவள்ளுவர் முதல் குறளிலேயே 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு? என உலகைக் குறிப்பிட்டுள்ளார். நக்கீரர், உலகம் உவப்ப' எனத் திருமுருகாற்றுப் படையினையும், உலகு எலாம்’ எனச் சேக்கிழார் பெரிய புராணத்தையும் தொடங்கியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. முன்னோர் முறைப்படியே கம்பர் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். அவையடக்கம் பாடுவதில் மாமன்னர் மன்னன் (கவிச்சக்கரவர்த்தி) ஆகிய கம்பர் மிகவும் தம்மைத் தாழ்த்திக் கொண்டு அவையடக்கம் கூறியுள்ளமை, அடியேனைப் (சு. ச.) போன்ற இக்கால எழுத்தாளர்கள் மிகவும் அறிந்து பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். ஆசை பற்றி: திருப்பால் கடல் முழுவதையும் ஒரு பூனை குடிக்க முற்பட்டதுபோல், குற்றமற்ற வெற்றியுடைய இராமனது கதையை யான் ஆசை பற்றி எழுதத் தொடங்கினேன்எனக் கம்பர் கூறியுள்ளார்.

  • ஓசை பெற்று உயர் பால்கடல் உற்று ஒரு

பூசை முற்றவும் கக்குபு புக்கென ஆசை பற்றி அறைய லுற்றேன் இக் காசு இல் கொற்றத்து இராமன் கதையரோ’’ (4)