பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 157 தேறல் வள்ளம் = மதுக் கிண்ணம். இப்பாடலின் முதல் அடியில், ஒன்றுக்கு முரணான விடமும் அமிழ்தும் சொல்லப்பட்டிருப்பதால், இந்த அமைப்யை முரண்தொடை என்பர். விடன் = விடம் = கடைப்போலி. கண்ணால் கொல்லும் நஞ்சுபோல் நோக்கினும், அமிழ்தம் போன்ற சொல்லால் பின்னர் இன்புறுத்துவர். மற்றொரு பெண், தன் முகம் மதுக் கிண்ணத்தில் தெரிவதைநோக்கி, அந்த நிழலை ஒரு பெண் என்று எண்ணி 'அடி பைத்தியமே! நீ வேறு நல்ல மதுவை அருந்தாமல் நான் அருந்தி மீதியாய் வைத்திருக்கும் இந்த எச்சில் மதுவை அருந்துகிறாயே என்று கூறி நகைத்தாளாம். 'அச்சநுண் மருங்குலாள் ஓர் அணங்கு அனாள் அளக பந்தி கச்சு வேல் கருங்கண் செவ்வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற, பிச்சி நீ என் செய்தாய் இப்பெருநறவு இருக்க வாளா எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள்’’ (11) அச்ச நுண் மருங்குல் = ஒடிந்து விடுமோ என அஞ்சும் படியான நுண்ணிய இடுப்பு. அளக பந்தி = கூந்தலின் செறிவான வளம். பிச்சி = பைத்தியக்காரி. தண்மதி மதுக் கிண்ணத்தில் தெரிந்த தன் முகத்தை, மது வேட்கையால் திங்கள் வந்து விழுந்து விட்டதாகக் கருதிய பெண் ஒருத்தி, அந்த நிழல் முகத் திங்களை நோக்கி மதியமே! நான் என் கணவரோடு ஊடிக் கூடாதிருக்கும் காலத்தில் என்மேல் வெப்பத்தை வீசாமல் தண்மையை வீசுவதானால், இந்த மதுவை இப்போது உனக்குத் தருவேன் என்றாள்: