பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 159. தன் கிளியை நோக்கி, சிவனது திருப்பெயரை ஒரு முறையாவது சொல்ல மாட்டாயா? உனக்குத் தேனோடு பால் தருவேன்-சொல்வாயாக-என்றாளாம். பாடல்: 'சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய் பவளத்தொடு தரளம் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயோ' (10) உலாவியல் படலம் கண் வாயில் இராமன் மிதிலையின் தெருவில் சென்று கொண்டிருந்த போது, கண்டு விரும்பிய பெண் ஒருத்தி தன் தோழியிடம் கூறிகிறாள்: தோழி! அந்த வஞ்சகன் என் கண் வழி யாகப் புகுந்து நெஞ்சில் வந்து தங்கி விட்டான். அவன் திரும்ப வெளியில் போகாவண்ணம் கண்ணாகிய வாயில் கதவை இறுக மூடி அடைத்து விட்டேன். படுக்கை அறைக்குச் செல்லலாம் வா’ என்றாள். மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்துதல் ஒருத்தி உள்ளம் நெக்கனள் உருகுகின்றான்: நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண் எனும் புலம் கொள்வாயில் சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாாள்' (14) இராமன் கண்வழியாகக் கள்ளத்தனமாய்ப் புகுந்து விட்டதால் அவனை வஞ்சன்’ என்றாள். கண்வழியாகப் புகுந்தவன் அக்கண் வழியாக வெளியே போகாதவாறு கண்ணை மூடிக் கொண்டதால், இவளுக்குக் கண் தெரியாதாதலால், படுக்கையறைக்குச் செல்வதற்குத்