பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பால காண்டப் சில குறள் கருத்துகள் அமைத்துள்ள கம்பர் பாடலை விளக்கியுள்ளேன். அந்நூல்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன். அவர் அவ்வாறே செய்தார். அந்நூல்களில் அமைந்திருப்பது போலவே, பால காண்டப் பைம் பொழில்’ என்னும் இந்நூலிலும், பல தலைப்புகளின் கீழ்த் தரப்பட்டுள்ள கம்பர் பாடல்களில் எடுத்தாளப்பட்டுள்ள பல குறள்களை எடுத்துக்காட்டி யுள்ளேன். ஒட்டு மாங்கனிகள்’ என்னும் இந்தத் தனித் தலைப்பிலும் குறள்கள் ஒருசில எடுத்தாளப்பட்டுள்ள, கம்பர் பாடல்களைக் காண்போம்: நாட்டுப் படலம் தம் இல்லும் தம் உணவும்: கோசல நாட்டில், பல இனத்தவரும் உணவு கொள்ளும் ஆரவாரம் எங்கும் மிக்குள்ளது. வாழை, மா, பலா என்னும் முக்கனிகளும், நாலா வகையான பருப்பு வகைளும், செந்நிறத் தயிர்க் கட்டிகளும் இன்ன பிறவும் இடையிடையே கலந்த சோற்றினை, தங்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து கொண்டு, தாம் மட்டும் அல்லாமல், விருந்தினர்-சுற்றத்தார் முதலியவரோடும் அந்நாட்டு மக்கள் உண்கிறார்களாம். "முந்து முக்கனியின், நானா முதிரையின், முழுத்த நெய்யின், செந்தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின் தந்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினோடும் அந்தணர் முதலோர் உண்டி அயிலுறும் அமலை எங்கும்’ (22) தந்தம் = தம்தம். இந்தக் காலத்தில் பல வகைக் கனிகள் உண்ணப்படுகின்றன. அந்தக் காலத்தில் வாழை,