பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பால காண்டப் வாரொன்று பூங்குழலாள் ஆய்ச்சி கையில் வந்ததற்பின் மோரென்று பேர்பெற்றாய் முப்பேரும் பெற்றாயே' என்னும் தனிப்பாடல் காளமேகப் புலவருடையது. மோர் நீர் பரிமாறுபவர்டிள்,

நீரைக் கருக்கி நெய்யை உருக்கி மோரைப் பெருக்கி உண்பவர்தம் பேரை உரைக்கின் போமே பிணி'

என்னும் சித்தர் பாடலைப் பின் பற்றுபவர்கள் போலும்! நீர் கலக்காமல் நன்றாக முறுகக் காய்ச்சிப் பிரை குத்திய பால் அழுத்தமான கட்டித் தயிராகும்-சிறிதளவு செந்நிறம் கலந்தது போல் தோன்றும். இது கத்தியால் வெட்டி வைக்கப்படுமாம். தைத்திங்கள் கிலாகிறம் தான்மிகப் பெற்ற கத்தியால் வெட்டும் கட்டியாங் தயிர்' (20-98, 99) என்பது, அம்பிகாபதி காப்பியம் என்னும் நூலில் உள்ள ஒரு பகுதி. கோசல நாட்டில் இத்தகைய உணவு வளம் உள்ள தாம். கம்பரின் இப்பாடலில் உள்ள தம் தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினொடும் அயிலுறும் அமலை’ என்ற பகுதி மிகவும் இன்றியமையாதது. இது தொடர்பான குறள்பாவுக்குச் செல்லலாம். உண்மைக் காதலன் ஒருவன் தன் உண்மைக் காதலி யுடன் உடலுறவு கொண்டு மகிழ்ந்து, தனது மகிழ்ச்சிக்கு ஓர் ஒப்புமை கூறுகிறான்; அதாவது-'அம்மாடி! இந்தப் பெண், ணோடு கொண்ட புணர்ச்சி யின்பம், தம் சொந்த வீட்டில இருந்து கொண்டு தம் சொந்த உணவைப் பலர்க்கும் பங்கிட்டு உண்ணும் இன்பம் போன்றது-என்று பாராட்டினான்: