பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பால காண்டப் இந்தப் பூனையும் பால் குடிக்குமா' 'பாலுக்கும் காவல்-பூனைக்கும் தோழன்' என்பன பழமொழிகள் சார்பான தொடர்கள். இதனால் பூனைக்கும் பால் குடிப்ப தற்கும் உள்ள தொடர்பு தெரியவரும். எனவேதான், கம்பர் இந்த உவமையை எடுத்துக் கொண்டார். ஒர் ஒசை கேட்டதும் ஓடிவிடக்கூடிய பூனை, மிகுந்த ஒசையுடைய கடலை நெருங்கிக் குடிக்க முடியுமா? குவளை குவளை யாகக் குடிப்பதுபோல் இயலாது என்பதை "நக்குபு' என்ற சொல் அறிவிக்கிறது. ஆசை வெட்கம் அறியாது' என்பது ஒரு பழமொழி. கம்பர் ஆசையினால் பாடத்தொடங்கி விட்டாராம். பன்னப் பெறுபவோ? இயல், இசை, கூத்து என்னும் மூன்று தமிழ்க் கடல் துறைகளிலும் படிந்து முறையே முற்றும் அறிந்துள்ள உயர்ந்த புலவர்கட்குப் பணிவுடன் ஒன்று தெரிவித்துக் கொள்கின்றேன்? பித்துக் கொண்டார் பிதற்றியனவும், அறிவிலிகள் உளறியனவும், அன்பு (பக்தி) மேலிட்டவர்கள் குழறியனவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளத்தக்கனவோ?(இல்லை)-என்கிறார் கம்பர். 'முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் w பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?’’ (8) கம்பர் தம்மைப் பித்தர் - பேதையர் - பத்தர் என்றெல்லாம் கற்பனையாகக் கூறிக் கொண்டுள்ளார். பித்தரும் பேதையரும் அன்றி, பத்தரும் பக்தி மேலீட்டால் ஒன்று கிடக்க ஒன்று கூறிவிடக் கூடுமாதலின் பத்தர் சொன்னவும் எனக் குறிப்பிட்டுள்ளார். உயர்ந்த கவிஞர் கள் மட்டமான நிலைக்குப் போய் அது சொத்தை-இது பொத்தை என்று கூறி இடுப்பை ஒடிக்க மாட்டார்கள்மட்டமானவர்களே அவ்வாறு கூறுவது ஒருவகை இயல்பு என்பதை, 'உத்தமக் கவிஞர்' என்பதன் வாயிலாக