பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பால காண்டப் வில்லை. இதையறிந்த வயதான அந்த வீட்டுப் பெண்மணி அநாசாரம்- அநாசாரம்- எழுந்து போங்கள்- என்று விரட்டினார். உடனே நாங்கள் கட்டு சோற்றுடன் நடுத் தெருவிற்கு வந்து விட்டோம். பின்னர் அந்த அம்மையார் பெரிய குடம் நிறையத் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து ஊற்றித் திண்ணையைத் தேய்த்துக் கழுவினார். எனவே, தமது உணவைக்கூட, பிறர் இடத்தில் இருந்து கொண்டு உண்பது பொருந்தாது போலும். வள்ளுவனார், தம் இல்-தமது உணவு' என்பவற்றோடு விட்டாரா என்ன! தாம் மட்டும் உண்டால் போதாதுபலர்க்கும் பகுத்தளித்து உண்ண வேண்டும் என்கிறார். இதையொட்டி, ஒளவையார் அதியமானின் வள்ளன்மையைப் புகழ்கிறார்: சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே பெரிய கள் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே சிறு சோற்றானும் கணிபல கலத்தன் மன்னே பெருஞ் சோற்றானும் கணிபல கலத்தன் மன்னே' (புறநானூறு,235:1-5) என்பது ஒளவையாரின் பாடல் பகுதி. ஐயா! நீ மட்டும் உழைக்கவில்லை-மாடுகளும் உழைத்துள்ளன-எனவே, பலர்க்கும் ஈந்து உண்ணுக-என்னும் கருத்தில்,

  • பகடு கடந்த கூழ் பல்லாரோடு உண்க' (62—2)

என்று நாலடியாரும் கூறுகிறது. இந்தப் பகுத்துண்டலை, கம்பர், விருந்தொடும் தமரினொடும்’ என்னும் தொடரால் குறித்துப் போந்தார். எவ்வளவோ உயர்ந்த பாடல் அல்லவா இது!