பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பால காண்டப் இராமனுக்கு மாவலி என்பவனின் வரலாற்றை உரைத்தார்: திருமால் வாமனனாகிய குள்ள உருவினராய்ச் சென்று. மாவலியிடம் மூன்றடி மண் கேட்டார். கொடுப்பதாக மாவலி கூறினான். இதில் ஏதோ சூது உளது என்று. எண்ணி, மாவலியின் ஆசானாகிய வெள்ளி (சுக்கிராச் சாரியார்) தர வேண்டா என்று தடுத்தார். தடுத்த வெள்ளிக்கு, தடுத்தல் தவறு என்பதைச் சுட்டிக் காட்டிப் பின்வருமாறு மாவலி கூறினான்: . மேலோய்! வள்ளல் என்றால் வழங்க வேண்டும். உயிரைப் பொறுத்ததாய் எது நேரினும் கொள்ளுதல் தீயது; கொடுத்தலே நல்லது-என்றான். வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோய் வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் எள்ளுவ என்சில; இன் உயிரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்’’ (19) இந்தப் பாடலில், வாங்குதல் நல்ல நெறி என்று எவரேனும் கூறினும் அது தீயது; கொடுப்பதால் மேலுலகம் கிடைக்காது என்றாலும் கொடுத்தலே நல்லது -என்னும் கருத்தமைந்த

  • நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று' (222) என்னும் குறள் மறைந்துள்ளது. மேலும் மாவலி கூறுகிறான்: இறந்தவர்கள் அனைவருமே இறந்தவர்களாக மாட்டார்கள். நாணம் விட்டுப் பிறரிடம் கையேந்தி வாங்குபவர்களே இறந்தவர்களாகக் கருதப்படுவர். பிறர்க்கு ஈந்தவர்கள், இறந்து விடினும், உயிருடன் இருப்பவர் களாகவே மதிக்கப் பெறுவர்: மோய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது ஏந்திய கைகொடு இரங்தவர் எந்தாய்