பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பால காண்டப் (குறிப்பு: இந்தப் பாடல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்பில் உள்ளது.) ஈண்டு, ஒருவர் மற்றொருவர்க்கு உதவுவதைக் கண்டு பொறாமைப் படுபவனுடைய சுற்றத்தாரும் அவனோடு உடையும் உணவும் இல்லாமல் கெட்டழிவர் என்னும் கருத்து பொதிந்துள்ள "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும்' (i.66). என்னும் குறள் எண்ணி மகிழ்தற்கு உரியது. மாவலி இவ்வாறெல்லாம் கூறி, வாமனனுக்கு மூன்றடி மண் கொடுக்கத் தாரை வார்ப்பதற்காகத் தன் கையைத் தண்ணிரில் நீட்டி நனைத்தும், இகழத்தக்க குள்ள வடிவுறு வாமனன், பார்த்தவர் வியக்கவும் அஞ்சவும்,உயர்ந்தவர்க்கு உதவிய உதவி போல, வானுற ஓங்கி உயர்ந்தான். கயங்தரு நறும்புனல் கையில் தீண்டலும் பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான் உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே' (24) இப்பாடலின் இறுதி அடி மிகவும் எண்ணத்தக்கது. உயர்ந்தவர்கு உதவிய உதவி மிகவும் பெரியதாக-மிகவும் நீண்டு உயர்ந்ததாக மதிக்கப்படுமாம். உயர்ந்தவர்க்கு ஐம்பது உருபாவும் கீழானவர்க்கு நூறு உருபாவும் தரின், இரண்டனுள் எது உயர்ந்தது?-எது தாழ்ந்தது?உயர்ந்தவர், மகராசன்-புண்ணியவான் ஐம்பது உருபா உதவினார் என்று வாழ்த்திக் கொண்டு செல்வார். தாழ்ந்தவரோ தூக்க முடியாமல் தூக்கி நூறு உருபா கொடுத்து விட்டான். கருமிப்பயல்-இருநூறு உரூபா தந்திருக்கக் கூடாதோ என வைது கொண்டே செல்வார். ஈண்டு, உதவியின் அருமை பெருமை, எவ்வளவு உதவி செய்தார் என்ற உதவியின் அளவைப் பொறுத்த