பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நயம் மிக்க நற்கனிகள் இங்கே, பாலகாண்டத்தில் உள்ள - நயம் மிகுந்த நல்ல கனிகள் போன்ற பாடல்கள் சிலவற்றைச் சுவைக்கலாம். நாட்டுப் படலம் உறங்கும் இடங்கள் : சங்குகள் நீரிலும், எருமைகள் நிழலிலும், வண்டுகள் மலர் மாலைகளிலும், திருமகள் தாமரையிலும், ஆமைகள் சேற்றிலும், சிப்பிகள் நீர்த் துறையிலும், அன்னங்கள் வைக்கோல் போரிலும், மயில்கள் சோலையிலும் உ றங்குமாம்.

  • நீரிடை உறங்கும் சங்கம் கிழலிடை உறங்கும் மேதி,

தாரிடை உறங்கும் வண்டு, தாமரை உறங்கும் செய்யாள் தூரிடை உறங்கும் ஆமை, துறையிடை உறங்கும் இப்பி, போரிடை உறங்கும் அன்னம், பொழிலிடை உறங்கும் தோகை' (6) கோசல நாட்டின் வளம் இப்பாடலில் நயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமகளின் இருப்பிடம் தாமரை என்று கூறும் மரபை ஒட்டித் தாமரை உறங்கும் செய்யாள் என்பது கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் 'உறங்கும்’ என்னும் சொல் ஒரே பொருளில் வழங்கப் பட்டிருப்பதால், இந்த அமைப்பு, சொல் பொருள் பின்வரு நிலை அணி எனப்படும்.