பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 175 நீங்கள் வந்ததனால் யான் அரசடைந்த பயனைப் பெற்றேன். இனி யான் உங்கட்குச் செய்ய வேண்டியது யாது? எனக் கைகூப்பி வணங்கி வினவினான். அதற்கு விசுவாமித்திரர் கூறியது:- காட்டில் யான் செய்யும் வேள்விக்கு அரக்கர்கள் இடையூறு செய்யா வண்ணம் தடுத்துக் காப்பதற்காக, உன் மக்கள் நால்வருள் இராமன் என்னும் ஒருவனை என்னுடன் அனுப்புக - என்று, உயிரைக் கெஞ்சிக் கேட்கும் எமனைப் போல் தயரதன் வருந்தும்படிக் கேட்டார்:

உரை செய்:பும் அளவில், அவன் முகம் நோக்கி,

உள்ளத்தில் ஒருவ ராலும் கரைசெய்ய அரியதொரு பேருவகைக் கடல் பெருகக் கரங்கள் கூப்பி அரைசு எய்தி இருந்த பயன் எய்தினேன் மற்று இனிச் செய்வது அருளுக என்று முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழியப் பின் மொழியும் முனிவன் ஆங்கே’’ (10.

  • தருவனத்துள் யானியற்றும் தவ வேள்விக்கு

இடையூறாத் தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காமவெகுளி என கிருதர் இடை விலக்கா வண்ணம் செரு முகத்துக் காத்தி என கின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என உயிர் இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்' (11). என்பன பாடல்கள். தனக்குப் பின்பு துன்பம் தரும் செய்தியை விசுவாமித்திர முனிவர் கூறப் போகிறார் என்பதை அறியாமல், முனிவரே! யான் அரசடைந்த பயன் இன்றே பெற்றேன் -தங்கட்கு வேண்டியதைக் கேளுங்கள் என்று தயரதன் கூறியது எதிர்மாறான