பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五贸6 பால காண்டப் சுவையைத் தருகின்றது. முதல் பாடலில் உள்ள அரைசு (அரசு), முரைசு (முரசு) என்பன இடைப் போலிகள். உடனே முனிவர், வேள்வி காக்க, என்னுடன் காட்டிற்கு, உன் பிள்ளைகள் நால்வருள் கருநிற இராமன் ஒருவனை அனுப்புக என்று கூறியதும் நயமான பகுதி உனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனரே- நால்வரையுமா அனுப்பும்படி நான் கேட்கிறேன்? இல்லையே, ஒருவனை அனுப்பினால் போதும் என்பது நயமான பகுதியல்லவா? பேச்சுத் திறன் இதில் காணப்படுகின்ற தல்லவா? எமன் உயிரை வலிந்து பற்றிக் கொண்டு செல்பவன். ஆனால், முனிவனோ, தயரதனது உயிரை இரந்து (யாசித்துக்) கேட்கும் எமன் போல் உள்ளான். இரந்து கேட்கும் எமன் ஒருவன் இல்லையாதால் இது 'இல் பொருள் உவமை அணி எனப்படும். இதுவும் நயமான பகுதியே. காமம் வெகுளி போன்றன நல்ல தவம் செய்ய வொட்டாமல் தடுப்பது போல், வேள்வி செய்ய விடாமல் அரக்கர்கள் தடுப்பதாகக் கூறியதும் நயமான உவமை. கவாகு, மாரீசன் என்னும் அரக்கர் இருவருக்குக் காமம், வெகுளி என்பன உவமையாகும். பெற்று இழத்தல் முனிவனது பேச்சு, வேல் புகுந்து துளைத்த மார்புப் புண்ணிலே, மேலும் நெருப்பு புகுந்தாற் போன்று தயரதனது காதில் புகுந்ததாம். அதனால், உள்ளத்துயர் உயிரைப் பிடித்து வெளியே தள்ள-உயிர் போகாமல் உள்ளேயே இருந்து கொண்டு ஊசாலாடிற்றாம்.கண்ணை இழந்தவன் இடையிலே கண் பெற்று மீண்டும் இழந்ததைப் போல் கொடிய துயர் உற்றான் தயரதன். பாடல்: எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த