பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பால காண்டப் அகலிகைப் படலம் கை-கால் வண்ணங்கள்: மிதிலை நோக்கிச் செல்லும் வழியில் காட்டில் ஒரு கல்லை மிதிக்க அகலிகை எழுந்தாள். இது தொடர்பாக விசுவாமித்திரர் இராமனைப் பாராட்டுகிறார்: இராமா! நீ தோன்றியதால் உலகுக்கு இன்பமே யன்றித் துன்பம் வராது. தாடகையோடு போர் செய்து உன் கைத் திறமையால் அம்பெய்து அவளைக் கொன்ற போது உன்கை வண்ணம் கண்டேன். இங்கே கல்லைக் காலால் மிதித்து அகலிகையை எழப் பண்ணியபோது உனது கால் வண்ணம் கண்டேன்-என்று பாராட்டு கிறார். இைவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி மற்று ஒர் துயர் வண்ணம் உறுவது உண்டோ மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்' (24) கைவண்ணம் கொலை செய்தது. கால் வண்ணம் அருள் புரிந்தது. துஷ்ட நிக்கிரக-சிஷ்ட பரிபாலனம்’ அதாவது, கொடியவரைக் கொன்று அடியவரைக் காப்பதுஎன்று சொல்வார்களே-அந்த நிலை இங்கே கூறப் பட்டிருப்பதிலுள்ள நயம் சுவைக்கத் தக்கது. ஒரு பெண்ணைக் கையால் கொன்று, மற்றொரு பெண்ணுக்குக் காலால் உயிர் தந்தான் என்பது நயமான பகுதி யல்லவா? மிதிலைக் காட்சிப் படலம் சாளரத்தில் சந்திரர்கள் : விசுவாமித்திரரும் இராம-இலக்குமணரும் மிதிலைத் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது