பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 179 பெண்கள், மேல் மாடத்திலுள்ள சாளரங்களின் (சன்னல் களின்) வழியாக இம்மூவரையும் பார்த்ததைக் கம்பர் மிகவும் நயமுடன் ஒவியப் படுத்தியுள்ளார். சாளரங்கள் தோறும் சந்திரர்கள் உதயம் செய்தார்களாம். இந்தச் சந்திரர்கட்கு நடுவே களங்கம் இல்லையாம். ஆனால், நடுவே, வேலும் வில்லும் முடிச்சுருளும் செவ்விதழும் @_ 6f 6f 6J 6)] ffLD. LI JT L-6R) : வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் கேளொடு கிடந்த நீலச் சுருளும் செங்கிடையும் கொண்டு ளிேருங் களங்கம் நீங்கி கிரை மணி மாட நெற்றிச் சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்' (14) அரத்தால் கூராக்கப்பட்ட வேல் என்பது, பெண்களின் கண்கள். மன்மதனது சிலை (வில்) என்பது புருவங்கள், நீலச்சுருள் என்பது, கரிய சுருண்ட கூந்தல். செங்கிடை என்பது சிவந்த உதடுகள். இவ்வுறுப்புகள் பொருந்திய பெண்களின் முகங்களே சந்திரர்கள் இவ்வாறு சாளரங்கள் தோறும் திங்கள் தோன்றுவதை மூவரும் கண்டனராம். தெருவில் புதிதாய்ப் போபவர்களைப் பெண்கள் வேடிக்கை பார்ப்பது இயல்பு என்பது இதனால் அறியக்கிடக்கிறது. கார் முகப் படலம் எண்ணும் கண்ணும் . தெருவில் இராமனைக் கண்ட சீதை இரவில் அவனை எண்ணி ஏங்குகிறாள்:-பூணு லாகிய மின்னலோடு முகில் விண்ணிலேயிருந்து இறங்கி வந்தாற் போன்று வந்த அந்த ஆடவர் என் எண்ணத்திலே இருந்தும் அவர் யார் என்று என்னால் அறிந்துகொள்ள இயல வில்லை. அவர் என் கண்ணுள்ளேயிருந்தும் அவர் உருவத்தை வெளியில் நன்றாகக் காண முடியவில்லை.