பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 183 யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஒதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான்' (6) கண்ணை மூடித் திறந்து இமைத்தால், அந்த மூடிய நேரம் கண்ணனைக் காணாது வீணாகி விடுமாதலின் பெண்கள் இமையாமல் விழித்து நின்றார்களாம். இராமன் எல்லாரிடத்தும் அருட்கண் உடையவன் ஆதலானும், எல்லாருக்கும் கண் போன்றவன் ஆதலாலும், உயர்ந்த அறிஞர்கள் கண்ணன் என்று ஒரு பெயர் வழங்கினர்.இந்தப் பாடலில் உள்ள நயமாவது,- அருட்கண் செலுத்துபவன்கண் போன்றவன் என்ற காரணங்கள் ஒரு புறம் இருக்க, இவன் எல்லாப் பெண்களின் கண்களிலும் புகுந்ததால் கண்ணன் என்னும் பெயருக்குப் பொருத்தமானவன் என்னும் பெயர்க்காரணம் கூறப்பட்டிருப்பது நயமானது அல்லவா? இடையின் இடைவெளி தெருவில் செல்லும் இராமனைப் பெண்கள் பலர் முன்னால் நின்று பார்த்துக் கொண்டுள்ளனர். அவர்களின் கூந்தல், முலைகள், அல்குல் ஆகியவை பின்னால் இருப்பவர்கட்கு இராமன் தெரியாதபடி மறைத்துக் கொண்டிருப்பதால், அவர்களின் பின்னால் நின்ற பெண் ஒருத்தி, அவர்களுடைய மிகவும் மெலிந்த இடையின் இடைவெளி வழியாக இராமனைப் பார்த்தாளாம். ' கருங்குழல் பாரம், வார்கொள் கனமுலை, கலைசூழ் அல்குல் நெருங்கின மறைப்ப, ஆண்டோர் நீக்கிடம் பெறாது விம்மும் பெருந்தடங்கண்ணி காணும் பேரெழில் ஆசை தூண்ட மருங்குலின் வெளிகளுடே வள்ளலை நோக்குகின்றாள் (17) குழல், முலை, அல்குல் ஆகியவை மறைப்பதற்குக் கம்பர் காரணமும் கூறியுள்ளார்.கருங்குழல் பாரம்என்பது