பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 185 தென்னம்பாளை கவரி-மல்லிகை காளாஞ்சி-தாழை மடல் வாள் -தென்றல் தேர்-கிளி குதிரை-இருள் யானை-கடல் முரசு-குயில் எக்காளம்-திங்கள் குடை. இவற்றைக் கொண்டு மன்மதன் ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் காம உணர்வை விளைவிக்கிறான்; இங்கே இராமனைப் பார்த்த பெண்கள் பலர் ஆதலின், அவர்கட்குக் காம உணர்வைத் தூண்டத் தன்னிடம் இருந்த மலர் அம்புகள் அனைத்தையும் செலவழித்து விட்டானாம். எனவே, மேலும் காமப் போர் புரியத் தன் தாழை மடலாகிய உடைவாளைக் கையால் உருவினானாம்: தாழை மடல் உடைவாள் போலவே நீளமாயிருக்கும். இந்தக் கற்பனைச் செய்தி மிகவும் நயமாயுள்ள தல்லவா? மன்மதன் மலர் அம்புகளை எய்து காதலை வளர்ப்பவன் என்னும் செய்தி பல இலக்கியங்களில் கூறப் பட்டுள்ளது. சிவப்பிரகாசரின் பிரபுலிங்கலீலை நூலில் பிரபு தேவர் வந்த கதி என்னும் பகுதியில் இப்படி ஒருசார்புக் கருத்து உள்ளது. மாயை என்னும் பெண் அல்லமன் என்னும் அழகன் மேல் மிக்க காதல் கொண்டு விட்டாள். மன்மதன் மேன்மேலும் வேலைசெய்துகொண்டிருக்கிறான். ஒன்றிரண்டு அம்பைத் தவிரக் கையிலிருந்த அம்புகள் அனைத்தையும் மாயைமேல் எய்து விட்டானாம். ஒன்றிரண்டு ஒழிய வாளி உளவெலாம் மாரன் தூர்த்தான்' (29) என்பது பாடல் பகுதி. தெருவில் உலாவரும் சிறந்த ஆடவர் மேல் பெண்கள் காதல் கொள்வதாகக் கூறுதல் ஒருவகை இலக்கிய மரபு. (இனிமேல் இத்தகைய இலக்கிய மரபைக் கைவிடுதல் நன்று).