பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பால காண்டப் எதிர்த்தான். அஞ்சிய தயரதன் என்ன ஆகுமோ என எண்ணித் துன்பக் கடலில் முழுகினான். இராமன் பரசுராமனை வென்று, தந்தை தயரதனைத் துன்பக் கடலிலிருந்து கரையேற்றினான். இராமனது வெற்றியைக் கண்டு பூரித்த தயரதன் மீண்டும் ஒரு கடலில்-அதாவது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிட்டான பாடல்: வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கிடத் தளிர்ப்புறு மதகரித் தானையான் இடை குளிப்பருங் துயர்க் கடல் கோடு கண்டவன் - களிப் பெனும் கரையிலாக் கடலுள் ஆழ்ந்தனன் (42) விழுமம் = துன்பம். மதகரித் தானையான் = தயரதன். கோடு கண்டவன் = கரை ஏறியவன். கோடு=கரை.துன்பக் கடலிலிருந்து தப்பிக் கரை ஏறியவன் மீண்டும் ஒரு கடலுள் (இன்பக் கடலுள்) மூழ்கிவிட்டதாகக் கூறுவது நயமான செய்தி. இதில் மேலும் ஒரு நயமாவது துன்பக் கடலைக் கடந்து கரை காண முடிந்தது; ஆனால், அடுத்து வீழ்ந்து முழுகிய கடலோ கரை காண முடியாதது என்பதாம். அதில் மிகவும் ஆழ்ந்து-ஆழமான பகுதிக்குச் சென்று விட்டானாம். எனவேதான், களிப்பு என்னும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன்' என்று நயமாகக் கூறியுள்ளார் கம்பர் பெருமான். இவ்வாறாக, கம்பர் பாலகாண்டத்தில், நயமான நல்ல பாடல் கனிகள் பலவற்றை நமக்குத் தந்து நுகர்ந்து சுவைக்கச் செய்துள்ளார். இனி அடுத்துப் பூந்துணர்கள் சிலவற்றைக் காண்பாம்