பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. புராண வரலாற்றுப் பூந்துணர்கள் பால காண்டப் பைம்பொழிலில் பூந்துணர்கள் போன்ற புராண வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன. ஆற்றுப் படலம் சரயுவும் கண்ணனும்: சரயு ஆற்று வெள்ளம், காளியன் என்னும் பாம்பின் மீது நின்று ஆடிய திருமாலாகிய கண்ணனைப்போல் (கிருஷ்ணனைப் போல்), பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவை உள்ள உறிகளையும் குருந்த மரத்தையும் மருத மரத்தையும், பெண்களின் வளையல்களையும் உடை களையும் கவர்ந்து இழுத்துச் சென்றது. 'செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உங்தி மறிவிழி ஆயர் மாதர் வளைதுகில் வாரும் நீரால் பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே (15) மேற்கூறிய எல்லாவற்றையும் ஆற்று வெள்ளம் கொண்டு போனது போலவே கண்ணனும் செய்துள்ளான்: சிறு பருவத்தில் பால் முதலியவற்றை வாரி உண்டான்; தன்னை அழிக்கக் குருந்த மரமாகவும் மருத மரமாகவும் வந்த அரக்கர்களை அழித்தான்; ஆயர் மடந்தையரின் வளையல்களையும்-அவர்கள் குளித்துக் கொண்டிருந்த