பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பால காண்டப் வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி' (26-234) என்னும் பதியும், புறநானூற்றில் உள்ள தோளழிப் படுத்த வாள் ஏர் உழவ' (268–13) என்னும் பகுதியும் ஒப்பு நோக்கத் தக்கன. மற்றும், வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை' (872) என்னும் குறள்பாவில் உள்ள வில் ஏர் உழவர் என்னும் தொடரும் எண்ணத் தக்கது. சந்திர சயிலப் படலம் மது கயிடவர் : அயோத்தியிலிருந்து திருமணங் காண மிதிலைக்குச் செல்லும் வழியில்-சந்திர சயிலம் என்னும் மலைப் பகுதியில் உள்ள நீர் நிலைகளைப் பெரிய யானைகள், கடலைக் க ல க் கி ய மது-கயிடவரைப் போலக் கலக்கினவாம். பெருங்களிறு அலைப் புனல் கலக்குவன, பெட்டுக் கருங்கடல் கலக்கும் மதுகயிடவரை ஒத்த' (25) என்பது பாடல் பகுதி. மது கயிடவன் என்னும் அரக்கர் இருவரும் நான்முகனிடம் இருந்த வேதங்களைக் கவர்ந்து கொண்டனர். இதைத் தேவர்கள் திருமாலிடம் முறையிட, அவர் மது கயிடவரிடமிருந்த வேதங்களை அவர்கள் அறியாதபடி மீட்டார். வேதங்களைக் காணாமையால் மது கயிடவர் கடலைக் கலக்கித் தேடினார்களாம். இது, யானைகள் நீரைக் கலக்குவதற்கு ஒப்புமையாக்கப் பட்டுள்ளது.